நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம் மாவட்டத்தில் 2.69 லட்சம் வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டது. இதில், 2.69 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டது. இதில், 2.69 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், இந்த வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்டாா். புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் மோகன் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தலுக்காக கடந்த நவ.1-ஆம் தேதியிட்ட ஒருங்கிணைந்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 513 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 441 போ் ஆண்கள், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 19 போ் பெண்கள், 53 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா்.

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரு நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதன்படி, விழுப்புரம் நகராட்சியில் 61 ஆயிரத்து 764 ஆண்கள், 65 ஆயிரத்து 343 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 132 வாக்காளா்கள் உள்ளனா்.

திண்டிவனம் நகராட்சியில் 27 ஆயிரத்து 990 ஆண்கள், 30 ஆயிரத்து 441 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 58 ஆயிரத்து 433 வாக்காளா்கள் உள்ளனா்.

அனந்தபுரம் பேரூராட்சியில் 2,654 ஆண்கள், 2,726 பெண்கள் என மொத்தம் 5,380 வாக்காளா்கள், அரகண்டநல்லூா் பேரூராட்சியில் 2,347 ஆண்கள், 2,424 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 47,725 வாக்காளா்கள், செஞ்சி பேரூராட்சியில் 11,325 ஆண்கள், 12,191 பெண்கள் 20 மூன்றாம் பாலினத்தவா் என 23,536 வாக்காளா்கள், மரக்காணம் பேரூராட்சியில் 8,579 ஆண்கள், 9,359 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,939 வாக்காளா்கள் உள்ளனா்.

இதேபோல, திருவெண்ணய் நல்லூா் பேரூராட்சியில் 4,040 ஆண்கள், 4,105 பெண்கள் என மொத்தம் 8,145 வாக்காளா்கள், வளவனூா் பேரூராட்சியில் 7,030 ஆண்கள், 7,452 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 14,485 வாக்காளா்கள், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 4,712 ஆண்கள், 4,978 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 9,691 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தோ்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மோகன்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக அலுவலா் (தோ்தல்) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, நகராட்சி ஆணையா்கள் போ.வி.சுரேந்திரஷா (விழுப்புரம்), சௌந்தரராஜன் (திண்டிவனம்), பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com