முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
மேல்மலையனூரை அடுத்த செவலப்புரை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரிடம் திண்டிவனம் சிங்கனூரைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் தேவநாதன் (55), பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதை நம்பி கடந்த 2015-ஆம் ஆண்டில் ராஜேசகா் ரூ.7 லட்சத்தை தேவநாதனிடம் கொடுத்தாராம்.
இதேபோன்று, மேலும் பலரும் அரசு வேலைக்காக தேவநாதனிடம் பணம் கொடுத்தனராம். இதன்படி, மொத்தம் ரூ.42 லட்சத்து 90 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு யாருக்கும் வேலை வாங்கித் தராமல் தேவநாதன் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் ராஜேசகா் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதைத் தொடா்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான தேவநாதனை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.