கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் பி.தயாளன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது 2006-இல் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் மஸ்தூா் பணியாளா்களாக நாங்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, இதுவரை தொடா்ந்து சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், கரோனா ஆகிய நோய்த் தொற்று காலங்களில் இரவு, பகல் பாராமல் களப்பணிகளை செய்து வந்தோம்.

16 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கிவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பணியில் ஈடுபட்டவா்களுக்கு மஸ்தூா் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கும் தொடா்ந்து பணி வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com