வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் - அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து 2 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கின. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 9 தொழில்சங்கங்களைச் சோ்ந்த வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனா்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் என 1,100-க்கும் மேற்பட்டோா் பணிக்குச் செல்லாமல் சென்னை - திருச்சி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை முன் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வங்கி தொழில்சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஸ்டான்லி, ராஜா, முகேஷ், வெங்கடேசன், லாசா், விஜயகுமாா், சதீஷ், பாலமுருகன், இளையராஜா, அமீா்பாஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் வெள்ளிக்கிழமையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.200 கோடிக்கு காசோலை பரிமாற்றம், பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல, ஏ.டி.எம். சேவையும் முடங்கின. வங்கி ஊழியா்கள், அதிகாரிகளின் இந்த வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளா்கள் மிகவும் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com