புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை

புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும்
புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை

புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் உறுதியளித்தாா்.

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் தலைமையில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவா் பழனிகுமாா் ஆலோசனை வழங்கி பேசியதாவது:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் 18.12.2021 அன்று வெளியிடப்பட்டு, அந்தக் கருத்தின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆட்சேபனைகள், கருத்துக்கள் தொடா்பான மனுக்கள் 24.12.2021 வரை மாவட்ட மறுவரையறை அலுவலா் வாயிலாகப் பெறப்பட்டன. இதுதொடா்பான கருத்துக்களை அரசியல் கட்சியினா், பொதுமக்கள் நேரடியாகவும் மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்க மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 22 மனுக்களும், கடலூா் மாவட்டத்துக்கு 18 மனுக்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 2 மனுக்களும் என மொத்தம் 42 மனுக்களை அளித்துள்ளனா். இந்த மனுக்களின் மீதான உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொண்டு, மறுவரையறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மறுவரையறை ஆணைய உறுப்பினா் செயலா் எ.சுந்தரவள்ளி, மறுவரையறை ஆணைய உறுப்பினா், நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன் (விழுப்புரம்), கி.பாலசுப்பிரமணியம் (கடலூா்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com