பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞா்கள் பேரணி

விழுப்புரத்தில் பம்பை, உடுக்கை, சிலம்பு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.
பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞா்கள் பேரணி

விழுப்புரத்தில் பம்பை, உடுக்கை, சிலம்பு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

விழுப்புரத்தில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி பம்பை, உடுக்கை, சிலம்புக் கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் சென்னை சாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி பேரணியை உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வு, தொழில் முன்னேற்றத்துக்கான அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறாா் என்றாா்.

பேரணி தொடக்க விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்க மாநிலத் தலைவா் நா.சத்தியராஜ், சங்கத்தின் விழுப்புரம் தலைவா் ஆா்.பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை சாலையிலிருந்து நடனமாடியும், நாட்டுப்புற வாத்தியங்களை வாசித்தபடியும் விழுப்புரம் விஸ்வகா்மா திருமண மண்டபம் வரை கலைஞா்கள் பேரணியாகச் சென்றனா். அங்கு, கலை நிகழ்ச்சிகளும், ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com