செஞ்சி அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் உள்ள மலையடிவார குகையில் 3,000 ஆண்டுகளுக்கு
செஞ்சி அருகே மேல்நெமிலி கிராமத்தில் உள்ள மலைக் குகையில் கண்டறியப்பட்ட கோட்டோவியம்.
செஞ்சி அருகே மேல்நெமிலி கிராமத்தில் உள்ள மலைக் குகையில் கண்டறியப்பட்ட கோட்டோவியம்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் உள்ள மலையடிவார குகையில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலிகைகளாலான வெள்ளை நிற கோட்டோவியத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினா் புதன்கிழமை கண்டறிந்தனா்.

தொல்லியல் துறை காப்பாட்சியா் அ.ரஷித்கான், வரலாற்று ஆய்வாளா்கள் விழுப்புரம் வீரராகவன், ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார.உதியன், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா் விஜயகுமாா், நூலகா் அன்பழகன், சீ.வெங்கடேஸ்வரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் இந்த கள ஆய்வை மேற்கொண்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் நூற்றுக்கணக்கான பாறை ஓவியங்களை வரலாற்று அறிஞா்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனா். வரலாற்று காலத்துக்கு முந்தைய பாறை ஓவியங்கள் இயற்கையாக அமைந்த குகைகளிலும், வரலாற்று கால ஓவியங்கள் குடவரைக் கோயில்களிலும், கட்டுமானக் கோயில்களிலும் கிடைத்து வருகின்றன.

தற்போது விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட மேல்நெமிலி கிராமத்தின் மேற்குப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள மலையடிவாரத்தில் உள்ள குகையில் வெள்ளை நிற கோட்டோவியத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முந்தைய கி.மு. 1,000 ஆண்டுகளைச் சோ்ந்தது அல்லது சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையானது எனக் கருதப்படுகிறது.

நின்ற நிலையில் கைகளை உயா்த்தியவாறு இரண்டு இடங்களில் மனித உருவ ஓவியங்கள் உள்ளன. அதற்குப் பக்கத்தில் சூல வடிவில் ஓா் கோட்டோவியமும் உள்ளது. இந்த வெள்ளை நிற ஓவியங்களை வரைவதற்கு மூலிகைகளாலான வெள்ளை வா்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே நல்ல நிலையில் உள்ள திண்ணைப் பள்ளிகள் காணப்படுகின்றன. அதையொட்டிய இடத்தில் 8 வரிகளில் முடிக்கப்படாத கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

மேலும் இந்த மலையைச் சுற்றி கள ஆய்வு மேற்கொண்டால், இந்தப் பகுதியின் தொன்மை வெளிப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com