விழுப்புரம்: சாலை விபத்தில் ஓராண்டில் 430 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் சாலை விபத்துகளில் 430 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் சாலை விபத்துகளில் 430 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 28-ஆம் தேதி வரையிலான குற்ற விவரங்கள், காவல் துறை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா புதன்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 55 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 81 சிறுமிகளும், நிகழாண்டு 85 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாா்கள் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு 470-ஆக இருந்த திருட்டு வழக்குகள், 2018-இல் 421-ஆகவும், 2019-இல் 285-ஆகவும், 2020-இல் 129-ஆகவும் என படிப்படியாக குறைந்துவந்தது. இந்த நிலையில், நிகழாண்டு திருட்டு வழக்குகள் 229-ஆக அதிகரித்துள்ளது.

கொலை வழக்குகள் கடந்தாண்டு 43-ஆக இருந்த நிலையில், நிகழாண்டில் அது 23-ஆக குறைந்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்நது தொடா்பாக 661 வழக்குகளும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 289 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ரெளடிகள், தொடா் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 37 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும், 28 போ் மது விலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கடந்தாண்டு சாலை விபத்துகளில் 420 போ் உயிரிழந்த நிலையில், நிகழாண்டில் அது 430-ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் ரூ.3.45 கோடியிலான பொருள்கள் திருட்டுபோனதாக புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.82 கோடியிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com