விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமாா் 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபட்ட ரோட்டரி சங்கத்தினா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபட்ட ரோட்டரி சங்கத்தினா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமாா் 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூா் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை சட்டத் துறை அமைச்சா் சி.சி.சண்முகம் தொடக்கிவைத்தாா்.

அப்போது, வானூா் எம்.எல்.ஏ. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், போலியோ கண்காணிப்பு அலுவலா் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

செஞ்சி பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் தொடக்கிவைத்தாா். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் மலா்விழி, சுகாதார ஆய்வாளா் ஏழுமலை மற்றும் ரங்கபூபதி செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் உடனிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,666 மையங்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 6,600 போ் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, எம்.எல்.ஏ. அ.பிரபு ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ச.நேரு, மருத்துவா்கள் சிவக்குமாா், பங்கஜம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை எம்.எல்.ஏ. இரா.குமரகுரு தொடக்கிவைத்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.என்.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்டத்தில் 1,058 மையங்களில் 1,27,576 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com