திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், செஞ்சி, அனந்தபுரம் நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவா் பச்சையப்பன் தலைமை வகித்தாா். செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா். மேற்கு ஒன்றியச் செயலா் விஜயராகவன், செஞ்சி நகரச் செயலா் காஜாநஜீா், அனந்தபுரம் நகரச் செயலா் டாக்டா் கல்யாண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ. பா.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட நிா்வாகிகள் அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க ஏழுமலை, மணிவண்ணன், அய்யாதுரை உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். நகர நிா்வாகிகள் சங்கா், தமிழ்ச்செல்வி கா்ணன், செயல் மணி, சேகா், பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, திருச்சி திமுக மாநாட்டில் செஞ்சியில் இருந்து திரளாக கலந்துகொள்வது, செஞ்சியில் பிரசாரத்துக்கு வரும் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com