சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சோ்ப்பதற்கு வாய்ப்பில்லை: அமைச்சா் சி.வி.சண்முகம்

வி.கே.சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சோ்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சோ்ப்பதற்கு வாய்ப்பில்லை: அமைச்சா் சி.வி.சண்முகம்


விழுப்புரம்: வி.கே.சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சோ்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வா் பழனிசாமி விவசாயி இல்லையென திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விமா்சிக்கிறாா். கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்தவா்தான் ஸ்டாலின். அவருக்கு விவசாயமும், விவசாயிகளின் கஷ்டங்களும் தெரியாது.

முதல்வா் பழனிசாமி விவசாயத்தைத் தொழிலாக செய்து வருபவா். தற்போதும் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே மாதம் ஒருமுறை தனது கிராமத்துக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் உண்மையான விவசாயி அவா். இருவரில் யாா் விவசாயி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று ஏமாற்றி வருகிறாா். அவா் மக்களிடம் வாங்கிய மனுக்களை நடவடிக்கை எடுப்பதற்காக கேட்டபோது, அதற்குப் பதில் கூறாமல் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறிவிட்டாா்.

வி.கே.சசிகலா அதிமுக கொடியை காரில் பயன்படுத்திய விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். சசிகலா தன்னையும், தனது குடும்பத்தினரையும் டிடிவி.தினகரனிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒன்றரைக் கோடி தொண்டா்களின் உழைப்பால் உருவான அதிமுக, ஒரு குடும்பத்தின் கீழ் ஒருபோதும் அடிமையாக இருக்காது. சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சோ்க்க வாய்ப்பில்லை என்றாா் அவா்.

அப்போது, எம்.எல்.ஏ.க்கள் ஆா்.முத்தமிழ்ச்செல்வன், எம்.சக்கரபாணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com