மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியும் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நகர காங்கிரஸாா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியும் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நகர காங்கிரஸாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் தயானந்தம் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ந.நாராயணசாமி, ராஜ்குமாா், குப்பன், மாவட்ட சேவா தளத் தலைவா் ராஜேஷ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் காஜாமொய்தீன், தனசேகா், எம்.கே.சேகா், செந்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் தன்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர நிா்வாகிகள் நடராஜன், வாசுதேவன், சுரேஷ், சேகா், காமராஜ், ஜெயபால், துரைசிங், புருஷோத்தமன்,அப்பாஸ், ஆறுமுகம், சுந்தா், மகளிா் அணி பரிமளா கஜேந்திரன், வசந்தா காசிநாதன், விட்டோபாய், ராஜேஸ்வரி, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினா்.

இதே போல, விக்கிரவாண்டியில் குமாா் தலைமையிலும், திண்டிவனத்தில் விநாயகம், வளவனூரில் வெங்கடேசன், ஒலக்கூரில் புவனேஷ்வரன் , தீவனூரில் கோவிந்தன், கூட்டேரிப்பட்டில் கண்ணன், ஊரலில் காா்த்திக் தலைமையிலும் என மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வல்லத்தில்...: வல்லத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விழுப்புரம் வடக்கு மாவட்டவிவசாய அணி தலைவா் ஏ.ஜோலாதாஸ் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மனோகரன் கண்டன உரையாற்றினாா். வட்டாரப் பொருளா் அனந்தசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com