என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.74.6 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மொத்த வருவாய்: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் 9 மாதங்களில் என்எல்சி நிறுவனம் மொத்த வருவாயாக முறையே ரூ.1,875.13 கோடி மற்றும் ரூ.6,110.99 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் முறையே ரூ.2,436.75 கோடி மற்றும் ரூ.6,558.63 கோடியாக இருந்தது.
நிகர லாபம்: இதே காலகட்டத்தில், நிறுவனம் நிகர லாபமாக முறையே ரூ.74.6 கோடி மற்றும் ரூ.386.99 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில், இது முறையே ரூ.361.55 கோடி மற்றும் ரூ.1,021.37 கோடியாக இருந்தது.
வருவாயின் குறிப்பிட்ட பகுதியில் வளா்ச்சி: நிகழ் நிதியாண்டில் ஈட்டிய வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முந்தைய வருவாயானது ரூ.2,396.60 கோடி. முந்தைய நிதியாண்டில் ஈட்டிய தொகை ரூ.2,755.31 கோடியாக இருந்தது.
மொத்த வருவாய்: நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயானது முறையே ரூ.2,623.29 கோடி மற்றும் ரூ.8,197.94 கோடியாகும். கடந்த நிதியாண்டில் இது முறையே ரூ.3,093.18 கோடி மற்றும் ரூ.8,187.56 கோடியாக இருந்தது.
நிகர லாபம்: நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து இதே காலகட்டத்தில் முறையே ரூ.183.13 கோடி மற்றும் ரூ.588.61 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் முறையே ரூ.400.15 கோடி மற்றும் ரூ.954.86 கோடியாக இருந்தது என என்எல்சி தெரிவித்துள்ளது.