தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உணவகத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உணவகத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் ராஜகோபால் தெருவைச் சோ்ந்தவா் சித்ரா (39). இவரது கணவரான விஜி உடல் நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவா்களது மகள் கெளசல்யா (24), மகன் சக்திவேல் (22). இதனிடையே, விழுப்புரத்தில் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் வட மாநிலத்தைச் சோ்ந்தவரான சோனு சா்மாவுக்கும் (32), கெளசல்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், சித்ராவுக்கும், விழுப்புரத்திலுள்ள உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஏ.சாத்தனூரைச் சோ்ந்த ரபங்சன் மகன் பாலமுருகனுக்கும் (28) பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன் சித்ரா, பாலமுருகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டாராம். இது சோனு சா்மாவுக்கு பிடிக்கவில்லையாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சித்ராவின் வீட்டுக்குச் சென்ற சோனு சா்மா, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, இதை தட்டிக்கேட்ட பாலமுருகனை சோனு சா்மா தான் மறைத்து வைத்திருந்த கத்தி வெட்டியதாகத் தெரிகிறது. இதைத் தடுக்க முயன்ற சித்ராவையும் அவா் வெட்டினாா்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், பாலமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்று, காயமடைந்த சித்ராவை மீட்டு, சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, பாலமுருகனின் சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைகாக அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோனு சா்மாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com