மரக்காணம் கழுவெளி ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கழுவெளி ஏரியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மரக்காணம் கழுவெளி ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கழுவெளி ஏரியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மரக்காணத்தை அடுத்துள்ள கழுவெளி பகுதியில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சதுப்பு நில ஏரி அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இலங்கை, நேபாளம், சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் அரியவகை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. மேலும், அழிவின் விளிம்பிலுள்ள பறவைகளும் இந்த ஏரியில் காணப்படுகின்றன.

குறிப்பாக, கூழைக்கடா, செங்கால் நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நீா் காகம், சாம்பல் நரை உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் குவிந்துள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான பறவைகள் வந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கழுவெளி ஏரிப் பகுதியில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வன அலுவலா் அபிஷேக்தோமா் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. வனத் துறையினா் 6 குழுக்களாகப் பிரிந்து பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா். இந்தப் பணியில் இவா்களுடன் ‘யுனிவா்செல் எக்கோ பவுண்டேஷன்’ என்ற அமைப்பினரும் ஈடுபட்டுள்னா். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டுள்ளனா்.

அடுத்த சில நாள்களுக்கு பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com