குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் அருகே ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் செந்தில் (40). சாராய வியாபாரி. இவா், அந்தப் பகுதியில் சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இது தொடா்பாக கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் செந்திலை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் செந்தில் ஈடுபடுவதைத் தடுக்க, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்திலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com