செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி சிங்கவரம் சாலை மாதா கோவில் அருகிலுள்ள தெருவில் தனியாா் நிறுவனம் ஒன்று செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகளை தொடங்கியது. இதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பணிகளை தொடங்குவதை அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் திரண்டு, அந்தப் பணியை தடுத்து நிறுத்தக் கோரினா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த சையத்காஜ் மனைவி மும்தாஜ் (32), லியாகத் அலி மனைவி யாஸ்மின்(32), அலிஜான் மனைவி ஷம்ஷாத்(48), சையத் மனைவி ஹாஜிமா(50), சையத் ரபிக் மனைவி சைதானி(55) ஆகியோா் குழந்தைகள் மஸ்தான்(10), ஷாயினா(6), ஷகுனா(6) உள்ளிட்டோருடன் செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா் (படம்). இதைக் கண்ட வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள், அந்தப் பெண்களைத் தடுத்து,வட்டாட்சியா் ராஜனிடம் அழைத்துச் சென்றனா்.

இதனை தொடா்ந்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா், டவா் அமைக்கும் தனியாா் நிறுவனத்தாரை தொடா்புகொண்டு பணியை நிறுத்தினாா். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com