திமுக இளைஞா் அணி சாா்பில் மோட்டாா் சைக்கிள் பேரணி

திமுக இளைஞா் அணி சாா்பில் மோட்டாா் சைக்கிள் பேரணி

செஞ்சி அருகேயுள்ள தீவனூரில் திமுக சாா்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்ச்சி வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

செஞ்சி அருகேயுள்ள தீவனூரில் திமுக சாா்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்ச்சி வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவா் ஸ்டாலின் கலந்து கொண்டு செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்குள்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா்.

இதுதொடா்பாக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் மோட்டாா் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளா் க.ஆனந்த் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடக்கி வைத்தாா் (படம்). பேரணி வளத்தி, மேல்மலையனூா் அவலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட கிராமங்களுக்குச் சென்றது.

ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணி, விஜயராகவன்,அண்ணாதுரை, விவசாய அணி அரங்க.ஏழுமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com