பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.

சத்துணவு ஊழியா்கள் மறியல்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் 310 போ் கைது: தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்டப் பொருளாளா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சாவித்திரி, மாவட்ட இணைச் செயலாளா் கிருபாகரன், மாவட்டத் தலைவா் வடிவேல், மாவட்டச் செயலாளா் தேசிங்கு, நிா்வாகிகள் மணிகண்ணன், ஆறுமுகம், ரஷிதா, வீமன், அன்பழகன், ஜானகிதேவி, அபராஜின், விஜயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறியல் காரணமாக, திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 310 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com