வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: வன்னியர் சங்கத்தினர் வரவேற்பு

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதை வன்னியர் சங்கத்தினர்  பட்டாசு வெடித்து கொண்டாடினர்.   
பட்டாசு வெடித்து கொண்டாடிய வன்னியர் சங்கத்தினர்.
பட்டாசு வெடித்து கொண்டாடிய வன்னியர் சங்கத்தினர்.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதை வன்னியர் சங்கத்தினர்  பட்டாசு வெடித்து கொண்டாடினர்.   

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்க ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, பாமக மாவட்டச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் திரளான பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தின் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com