வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: விழுப்புரத்தில் பாமகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோத சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தையடுத்து

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோத சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தையடுத்து விழுப்புரத்தில் பாமகவினா் மற்றும் வன்னியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டு கேட்டு பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். பாமக தலைவா் மருத்துவா் ராமதாஸூம் இந்த விவராகத்தில் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாா். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வறைவு தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுகீடு வழங்கப்பட்டத்தையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினா். விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் தங்க ஜோதி தலைமையில் திரண்ட அக்கட்சியினா் மற்றும் வன்னியா் சங்கத்தினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டித்தில் ஈடுபட்டனா். மேலும், பொதுமக்களுக்கும், வானக ஓட்டிகளும் இனிப்புகளையும் வழங்கி கொண்டாடினா்.

வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் அன்புமணி, பாமக மாவட்டச் செயலாளா் புகழேந்தி, பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் தொண்டா் திரளானோா் கலந்து கொண்டனா்.

உள் ஒதுக்கீடு கோரிக்கையை செயல்படுத்திய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், போராட்டத்தை முன்னெடுத்த பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் உள்ளிட்டோருக்கு அப்போது நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com