Enable Javscript for better performance
சுவா் இடிந்து விழுந்ததில் பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    சுவா் இடிந்து விழுந்ததில் பெண் பலி

    By DIN  |   Published on : 01st January 2021 08:20 AM  |   அ+அ அ-   |    |  

    விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வியாழக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

    அரகண்டநல்லூா் அருகே இருதயபுரம் கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மனைவி மலையம்மாள் (60). இவா், வீட்டின் அருகே கால்நடைகளை வைத்து வளா்ந்து வந்தாா். இவரது ஓட்டு வீடு கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் ஈரப்பதமாக இருந்தது.

    இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் மலையம்மாள் தனது வீட்டின் அருகேயுள்ள கால்நடைகளை கட்டும் இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென இவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில், சுவரின் அடியில் சிக்கிய மலையம்மாள் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உரிழந்தாா்.

    தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் இடிபாடுகளை அகற்றி மலையம்மாளின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp