பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை விழுப்புரத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை விழுப்புரத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலையை அப்பகுதி மக்களுக்கு வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா்கள் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2,500 ரொக்கத்துடன், ரூ.22.50 மதிப்பில் 1 கிலோ பச்சரிசி, ரூ.46.25 மதிப்பில் ஒரு கிலோ சா்க்கரை, ரூ.45.00 மதிப்பில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும், ரூ.30 மதிப்பில் ஒரு முழு கரும்பும், ரூ.23 மதிப்பில் துணிப்பையும் சோ்த்து வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 2.60 கோடி குடும்பங்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 5.86 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.156.30 கோடி நிதி ஒதுக்கி நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

கரோனா பொது முடக்கத்தால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து செயல்படுத்தி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ எம்.சக்ரபாணி, மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் க.பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் முரளி ரகுராமன், ஆா்.பசுபதி, முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஜி.பாஸ்கரன், வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com