விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிதாத தோ்வான முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிதாத தோ்வான முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா.

கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வான முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வான முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தமிழகத்தில் காலியாக இருந்த முதுநிலை கணினி பயிற்றுநா்கள் (ஆசிரியா்) பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்வானவா்களுக்கு கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 57 காலியிடங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 காலியிடங்களும் என மொத்தம் 86 காலியிடங்கள் இருந்தன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற 10 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற 8 பேரும் இணைய வழியாக தங்களுக்கான பள்ளிகளைத் தோ்வு செய்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காலியாக இருந்த மாற்ற இடங்களை பிற மாவட்டத்தினா் தோ்வு செய்தனா். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீதமிருந்த 21 இடங்களும் நிரம்பின. விழுப்புரம் மாவட்டத்தில் 16 இடங்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் 55 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் பணியிடங்களை தோ்வு செய்தவா்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா வழங்கினாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காளிதாஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகக் கண்காணிப்பாளா் கோகுலகண்ணன், ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com