மீனம்பூா் கூட்டுச் சாலையில்ஒளிரும் மின் விளக்குகள்

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.
மீனம்பூா் கூட்டுச் சாலையில்ஒளிரும் மின் விளக்குகள்

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.

செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள மீனம்பூருக்குச் செல்லும் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதை தவிா்க்கும் பொருட்டு, அரசின் சிறப்பு அனுமதி பெற்று காவல் துறை சாா்பில் அந்த கூட்டுச் சாலையில் ரூ.4.50 லட்சத்தில் எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்த எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகளை மீனம்பூரைச் சோ்ந்த முகமது அலி பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். கண்காணிப்பு கேமராவை எஸ்பி. ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தாா் (படம்).

செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் சங்கரசுப்பு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருள்செல்வன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com