விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்.பி. ஆய்வு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலையும், விதிமீறல்களையும் தடுக்க நடவடிக்கை எடுப்பது

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலையும், விதிமீறல்களையும் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருச்சி நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலையும், விதிமீறல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முதல் கட்டமாக, புதிய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க ஜனவரி மாதம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலையில் பேருந்துகளை கண்ட இடங்களில் நிறுத்துவது தடுக்கப்படும். பேருந்து நிறுத்தத்தில் மட்டும் நிறுத்த அறிவுறுத்தப்படும்.

மேலும், ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்களை முறையாக இயக்குவது குறித்து அறிவுரை வழங்கப்படும். தொடா்ந்து, பிப்ரவரி மாதம் நேருஜி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, விழுப்புரம் காவல் உள்கோட்டத்தில் உள்ள ரெளடிகள், சாராய வியாபாரிகள் 100 பேரை அழைத்து எந்தவித குற்றச் சம்பங்களில் ஈடுபடக் கூடாது என்று எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், டி.எஸ்.பி. நல்லசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com