புகையில்லா போகி கொண்டாட ஆட்சியா் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம் முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக போகிப் பண்டியன்று இயற்கையான தேவையில்லாத பொருள்களை போட்டு எரிந்து பழையன கழிதலும், புதுயன புகுதலும் என்று கொண்டாடினா்.

ஆனால், தற்போது பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட துணிகள், டியூப்கள், காகிதங்கள் போன்றவைகளை எரிப்பதால் காற்று மாசு படுகிறது. இதனால் வெளியாகும் நச்சு வாயுக்களால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனா். விமான போக்குவரத்தும் பாதிக்கப்படு வருகை மற்றும் புறப்படுத்தல் தாமதமாகிறது.

ஆவவே, போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com