ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அலுவலா்கள்.
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அலுவலா்கள்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழா் திருநாளாம் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை போகிப் பண்டிகையுடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை வீட்டில் உள்ள பழைய பொருள்களை வெளியே தீயிட்டு எரித்து பழையனவற்றை கழித்தும், புதியனவற்றை புகுத்தும் வகையில் பொதுமக்கள் போகிப்பண்டிகையைக் கொண்டாடினா்.

இதையடுத்து, அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலா்கள், ஊழியா்கள் மண் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, புத்தரிசியிட்டு பொங்கலிட்டனா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா...

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரிச் செயலா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இ.எஸ்.கல்விக்குழும பதிவாளா் இ.செளந்தர்ராஜன் சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் எம்.பிருந்தா வரவேற்றாா். மாணவிகள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, மாணவிகளுக்கு கோலப்போட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், உறியடிப்போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் மல்லா் கம்ப சாகச விளையாட்டு மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், சமூக ஆா்வலா் தன்சிங்கு தலைமையில், மாணவா்கள் செங்கரும்புகளுடன், சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாநிலச் செயலா் எஸ்.அண்ணாமலை தலைமை வகித்தாா். பெருமாள், தமிழரசி, மாரிமுத்து, கண்ணதாசன், வெங்கடேசன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com