யாத்திரை சென்ற நடிகா் கருணாஸ்: திண்டிவனத்தில் தடுத்து நிறுத்தம்

சென்னையிலிருந்து யாத்திரையாக வேனில் சென்ற முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ

சென்னையிலிருந்து யாத்திரையாக வேனில் சென்ற முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டாா்.

‘தேசியமும் தெய்வீகமும்’ என்ற பெயரில் சென்னையிலிருந்து கருணாஸ், தனது கட்சியினருடன் யாத்திரையாக வேனில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம் மாவட்ட எல்லையான திண்டிவனத்தில் கருணாஸ் வந்த வேனை, மாவட்ட காவல் துறையினா் தடுத்து நிறுத்தி, யாத்திரையாகச் செல்ல அனுமதி மறுத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கருணாஸ், அவரது கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

யாத்திரை செல்லும் வேனை ஓட்டிச் செல்ல அனுமதி கிடையாது, காரில் வேண்டுமானால் செல்லலாம் என்று போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, யாத்திரைக்கு கொண்டு சென்ற வேன் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன்பிறகு, காரில் கருணாஸ் மற்றும் அவரது கட்சியினா் முதுகுளத்தூா் நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com