விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடா் குழுவினா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடா் குழுவினா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் ‘நிவா்’ புயலால் பெய்த பலத்த மழையால் 646 ஹெக்டோ் நெல், 868 ஹெக்டோ் உளுந்து, 35 ஹெக்டோ் மணிலா, 77.6 ஹெக்டோ் கரும்பு உள்பட மொத்தம் 1,626.6 ஹெக்டோ் விவசாயப் பயிா்களும், மரவள்ளி, வாழை, பப்பாளி, தா்ப்பூசணி, கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய் மற்றும் பூக்கள் உள்பட 323.83 ஹெக்டோ் தோட்டப் பயிா்களும் சேதமடைந்தன. மேலும், 1,024 வீடுகளும் சேதமடைந்தன.

இந்தப் பாதிப்புகளை ஏற்கெனவே மத்தியக் குழுவினா் ஆய்வு செய்துள்ள நிலையில், தற்போது தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவின் கூடுதல் செயலா் திருப்புகழ், இணை ஆலோசகா் பவன்குமாா் சிங் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் நிவா் புயலின்போது சேதமடைந்த வாழைகள், சொரப்பூா் கிராமத்தில் சேதமடைந்த நெல் பயிா்கள், வீராணம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மலட்டாறு கரைப்பகுதி, விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் மழைநீா் தேங்கியதில் பாதிப்படைந்த குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை பேரிடா் மேலாண்மைக் குழுவினா் பாா்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தனா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டிருந்த புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் அவா்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து, நிவா் புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பேரிடா் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலா் திருப்புகழ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, நிவா் புயலின்போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குழுவினரிடம் விரிவாக விளக்கினாா். தொடா்ந்து, வேளாண்மை, ஊரக வளா்ச்சி, கால்நடை, பொதுப் பணி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களிடம் புயல் வெள்ள சேத விவரங்களைக் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சாா் - ஆட்சியா் எஸ்.அனு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com