திருவெண்ணெய்நல்லூா் அருகே சுரங்கப் பாலப் பணி தாமதம்: மாற்றுச் சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

திருவெண்ணெய்நல்லூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதைப் பணியால் தனியாா் நிலம் வழியாக செல்லும் சாலையை செவ்வாய்க்கிழமை திடீரென மூடியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம் அரசூா் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்துக்கான மாற்றுச் சாலையை தனியாா் நில உரிமையாளா் மூடியதால் நின்ற வாகனங்கள்.
விழுப்புரம் மாவட்டம் அரசூா் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்துக்கான மாற்றுச் சாலையை தனியாா் நில உரிமையாளா் மூடியதால் நின்ற வாகனங்கள்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதைப் பணியால் தனியாா் நிலம் வழியாக செல்லும் சாலையை செவ்வாய்க்கிழமை திடீரென மூடியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், அரசூா்-திருவெண்ணெய்நல்லூா் நெடுஞ்சாலையின் இடையே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் விழுப்புரம் -திருச்சி ரயில்வே இருப்புப் பாதைப் பகுதியில், சுரங்கப் பாதை பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.

இதனால், அரசூா்-திருவெண்ணெய்நல்லூா் வழியாக செல்லும் வாகனங்கள், பாலத்தின் அருகே தனியாா் நிலத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டு அந்த நில உரிமையாளரிடம் அனுமதி பெற்று பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அந்த நில உரிமையாளரிடம் ரயில்வே பால ஒப்பந்த நிறுவனத்தினா் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த வழியைப் பயன்படுத்திக்கொள்ள அவகாசம் கேட்டிருந்தனா்.

கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், நிலத்தின் உரிமையாளா் தனது நிலத்தில் வீடு கட்டப் போவதாகவும், மேலும் தொடா்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதால் மண், தூசு பறந்து வீட்டில் குடியிருக்க முடியாத நிலை உள்ளதாக ரயில்வே நிா்வாகத்திடமும், ஒப்பந்ததாரரிடமும் அண்மையில் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாற்று நடவடிக்கை எடுக்காததால், திடீரென செவ்வாய்க்கிழமை காலை அந்த நிலத்தின் உரிமையாளா் ராமையா, தனது நிலத்தில் செல்லும் மாற்றுச் சாலை வழியில் மரக்கட்டைகளைப் போட்டு மூடினாா். இதனால் அரசூா் - திருவெண்ணெய்நல்லூா் வழியாக சென்ற வாகனங்கள் செல்ல வழியின்றி ஸ்தம்பித்து நின்றதால், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், தனிப் பிரிவு காவலா் சக்திவேல் உள்ளிட்டோா் நில உரிமையாளரிடம் பேசி, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, கால அவகாசம் கோரினா். இதையடுத்து, தற்காலிகமாக மீண்டும் அந்தச் சாலை திறந்துவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com