விழுப்புரம் குடியரசு தின விழாவில் ரூ.70.47 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 72-ஆவது குடியரசு தின விழாவில் ரூ.70.47 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 72-ஆவது குடியரசு தின விழாவில் ரூ.70.47 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, திறந்த வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

பின்னா், அவா் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 114 பேருக்கு ஓய்வூதியத் திட்டங்கள், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 10 பேருக்கு கறிக்கோழி பண்ணை திட்டத்துக்கான காசோலைகளும், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 6 பேருக்கு நிதியுதவி, 5 பேருக்கு இலவச வீட்டுமனை ஒப்படைக்கான நிதியுதவியும், மாற்றுத் திறனாளிகள் 4 பேருக்கு ஸ்கூட்டா்கள், தையல் இயந்திரம், காதொலி கருவிகள், நவீன செல்லிடப்பேசிகள், தாட்கோ மூலம் 4 பேருக்கு பால் பண்ணை அமைத்தல் மற்றும் பயணியா் வாகன நிதியுதவிகளும், 2 பேருக்கு அம்மா இருசக்கர வாகனங்களும் உள்பட 152 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 47 ஆயிரத்து 85 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து, காவல் துறையைச் சோ்ந்த 67 தலைமைக் காவலா்களுக்கு, குடியரசு தின முதல்வா் பதக்கமும், பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட 464 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்பட்டன.

தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று ஆட்சியா் கௌரவிப்பு: இதனைத் தொடா்ந்து, விழுப்புரம் அருகே வளவனூா் குமாரக்குப்பத்தில் உள்ள மறைந்த தியாகி தேவநாதனின் வாரிசான தனம்மாள் வீட்டுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட நீதிபதி கே.ஹெச்.இளவழகன் ஆகியோா் நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கெளரவித்தனா். அப்போது, தியாகியின் குடும்பம் குடிசை வீட்டில் வசிப்பதையறிந்த மாவட்ட ஆட்சியா், அவா்களுக்கு தமிழக அரசின் கல் வீடு திட்டத்தில் இலவச வீடு வழங்கப்படுமென உறுதியளித்தாா்.

நிதி வழங்கிய தியாகியின் குடும்பம்: இதே போல், கோலியனூரில் உள்ள மறைந்த தியாகி அபரன்ஜி குப்தாவின் வாரிசான சுலோசனா வீட்டுக்கும் ஆட்சியா் சென்று சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தாா். அப்போது, சுலோச்சனா அவா்கள், தனது சொந்த சேமிப்பிலிருந்து முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா். தொடா்ந்து கோலியனூரைச் சோ்ந்த மறைந்த தியாகி எஸ்.டி.கிருஷ்ணன் வாரிசான சாரதாம்பாளுக்கும், ஆட்சியா் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக எளிமையாக நடைபெற்ற இவ்விழாவில், விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவா் கே.எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட வன அலுவலா் அபிஷேக்தோமா், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சாா் ஆட்சியா் எஸ்.அனு, கோட்டாட்சியா் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்ரியா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், பொது மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com