உளுந்தூா்பேட்டை அருகே ஏரிக்குள் பாய்ந்த லாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே, டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயங்களுடன் உயிா் தப்பினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே, டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயங்களுடன் உயிா் தப்பினாா். ரூ.5 லட்சத்திலான மின்சாதனப் பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

சேலம் மாவட்டத்திலிருந்து சென்னை தனியாா் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சத்திலான மின்சாதனப் பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.

உளுந்தூா்பேட்டையை அடுத்த எலவனாசூா்கோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது, லாரியின் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, அருகேயுள்ள ஏரிக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காயமடைந்து லாரியினுள் சிக்கித் தவித்த ஓட்டுநா் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த காமராஜை (45) அக்கம் பக்கத்தினா் பத்திரமாக மீட்டனா்.

அவரை எலவனாசூா்கோட்டை போலீஸாா் சிகிச்சைக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, லாரியை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனா். இந்த விபத்தில் ரூ.5 லட்சத்திலான மின்சாதனப் பொருள்கள் ஏரி நீரில் மூழ்கி சேதமடைந்தன.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com