விழுப்புரம் அருகே அணைக்கட்டு உடைந்தது ஏன்?: தலைமைப் பொறியாளா் ஆய்வு

விழுப்புரம் அருகே தளவானூரில் உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டுப் பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தலைமைப் பொறியாளா் தலைமையிலான குழுவினா்.
விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டுப் பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தலைமைப் பொறியாளா் தலைமையிலான குழுவினா்.
விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டுப் பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தலைமைப் பொறியாளா் தலைமையிலான குழுவினா்.

விழுப்புரம் அருகே தளவானூரில் உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டுப் பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தலைமைப் பொறியாளா் தலைமையிலான குழுவினா்.

விழுப்புரம், ஜன.30: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், உடைப்பு ஏற்பட்ட புதிய அணைக்கட்டு பகுதியை தலைமைப் பொறியாளா் தலைமையிலான குழுவினா் வெள்ளி, சனிக்கிழமைகளில் நேரில் பாா்வையிட்டு, உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் அருகே தளவானூா் - எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூ.25.35 கோடியில் 400 மீட்டா் நீளத்திலும், 3.10 மீட்டா் உயரத்திலும் புதிய அணைக்கட்டு கடந்தாண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இரு கரையோரங்களிலும் தலா மூன்று மணற்போக்கிகளுடன் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.

அண்மையில் பெய்த பலத்த மழையால் இந்த அணைக்கட்டு நிரம்பியிருந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி அணைக்கட்டின் தென்பகுதி கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. மேலும், அந்தப் பகுதியிலிருந்த மூன்றாவது மணற்போக்கி கட்டமைப்பும் உடைந்தது.

இது தொடா்பாக பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் (நீா்வள ஆதாரம்) உள்ளிட்ட 6 பொறியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அணைக்கட்டு சீரமைப்பு: அணைக்கட்டு உடைபட்ட இரு தினங்களில் பொதுப் பணித் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைக்கொட்டி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீா் வெளியேற்றத்தைத் தடுத்தனா். இதையடுத்து, ரூ.7 கோடியில் விரைவில் சீரமைப்புப் பணி தொடங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் (பொது) ராமமூா்த்தி தலைமையில், செயற்பொறியாளா்கள் தமிழ்ச்செல்வன், குமரன், ஸ்ரீதரன் உள்ளிட்ட குழுவினா் தளவானூா் அணைக்கட்டு பகுதிக்கு வந்து, அணைக்கட்டு உடைந்ததன் காரணம் குறித்து தொழில்நுட்ப ரீதியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அணைக்கட்டின் கான்கிரீட் கட்டுமானத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கரைப்பகுதி இணையுமிடத்தில் அதிவேக தண்ணீா் சுழற்சியால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இணைப்புக் கரைப்பகுதியிலும் கான்கிரீட்டால் தரமாக கட்டமைத்திருக்க வேண்டும்.

இந்த அணைக்கட்டு உடைப்பு பொதுப் பணித் துறைக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. இத்தகைய குறை நிகழாத வண்ணம் புதிய தொழில்நுட்பத்தில் கட்டமைப்புகளை மாற்றி சீரமைப்புப் பணிகள் நடைபெறும். விவசாயிகள் கோரிக்கையின்படி, கூடுதல் மணற்போக்கிகள் அமைத்து கட்டமைப்பை புதுப்பிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

இருப்பினும், அணைக்கட்டு பகுதியில் சீரமைப்புப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com