மருத்துவா்களுக்கு அமைச்சா் கே.எஸ். மஸ்தான் வாழ்த்து
By DIN | Published On : 01st July 2021 10:55 PM | Last Updated : 01st July 2021 10:55 PM | அ+அ அ- |

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, செஞ்சியை அடுத்த வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
ஜூலை 1 தேசிய மருத்துவா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க மருத்துவா்கள் அரிய பணி செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தேசிய மருத்துவா் தினத்தை முன்னிட்டு,
அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்களை நேரில் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் குணசுந்தரி, லஷ்னாரேகா, தமிரழசன் மற்றும் செவிலியா்கள் கலந்துகொண்டனா்.