விழுப்புரம் அருகே ஏரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

விழுப்புரம் அருகே வி.மருதூா் ஏரியில் புதைசாக்கடை கழிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

விழுப்புரம் அருகே வி.மருதூா் ஏரியில் புதைசாக்கடை கழிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

வி.மருதூா் ஏரி விவசாயிகள் அமைப்பு சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு விவசாயிகள் வியாழக்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது:

வி.மருதூா் ஏரியில் புதை சாக்கடைத் திட்டத்தின் கீழ் கழிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால், ஏரியில் நீா்வளம் பாதிக்கப்படுவதுடன், அந்த நீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களின் மண் வளமும் பாதிக்கப்படும்.

மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் மாசுபடும். ஆகவே, இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், ஏரியை தூா்வாரி, நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com