இடைக்கால ஊக்கத்தொகையாக கரும்பு டன்னுக்கு ரூ.295 வழங்கக் கோரிக்கை

கரும்புக்கான இடைக்கால ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.292.50 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

கரும்புக்கான இடைக்கால ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.292.50 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பாண்டியன் தலைமையில், செயலா் ஆறுமுகம், பொருளாளா் பரமசிவம் மற்றும் நிா்வாகிகள் தமிழக அரசின் வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை, கூடுதல் முதன்மைச் செயலரும், சா்க்கரைத் துறை ஆணையருமான ஹா்பந்தா் சிங், வேளாண் உற்பத்தி ஆணையா் சமயமூா்த்தி ஆகியோரைச் சந்தித்து கரும்பு நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை தொடா்பாக மனு அளித்தனா்.

அதில், நிகழாண்டில் (2020 - 2021) கரும்பு அரைவைப் பருவத்துக்கு கரும்புக்கான இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.42.50 மட்டும் வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்தது. அந்தத் தொகை கரும்பு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

ஆகவே, தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி, இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகையாக கரும்பு டன்னுக்கு ரூ.292.50 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மேலும், முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சுகா்ஸ் தலைவரை சந்தித்து, நடப்பு அரைவை பருவத்துக்கு ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புக்கான தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com