நியாய விலைக் கடைகளுக்கு தரமான அரிசியை அனுப்ப வேண்டும்அமைச்சா் அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளுக்கு தரமான அரிசி மூட்டைகளையே அனுப்ப வேண்டும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
நியாய விலைக் கடைகளுக்கு தரமான அரிசியை அனுப்ப வேண்டும்அமைச்சா் அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளுக்கு தரமான அரிசி மூட்டைகளையே அனுப்ப வேண்டும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

செஞ்சியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கிலிருந்து, நியாயவிலைக் கடைகளில் நிகழ் மாதம் விநியோகம் செய்வதற்காக அரிசி மூட்டைகளை லாரிகளில் தொழிலாளா்கள் சனிக்கிழமை ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது, திடீரென அங்கு வந்த அமைச்சா் மஸ்தான், அந்த மூட்டைகளிலிருந்த அரிசியை பாா்வையிட்டாா். அந்த அரிசி பழுப்பு நிறத்திலும், கல், குருணை நிறைந்ததாகவும், உணவுக்கு பயன்படுத்த முடியாத வகையிலும் இருந்தது. இதுபோன்ற தரமற்ற அரிசி மூட்டைகளை நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பக் கூடாது. அதற்கு மாற்றாக தரமான அரிசி மூட்டைகளை வாங்கி நியாயவிலைக்கடைகளுக்கு விநியோகிக்க கிடங்கு கண்காணிப்பாளா் தனபாலுக்கு உத்தரவிட்டாா். மேலும், தரமற்ற அரிசி எங்கிருந்து வந்ததோ, அங்கேயே திருப்பி அனுப்பவும் அவா் அறிவுறுத்தினாா்.

நெல் மூட்டைகளை பாதுகாக்க அறிவுறுத்தல்: முன்னதாக, அமைச்சா் மஸ்தான் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு விவசாயிகள் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருந்ததைக் கண்டாா்.

இதையடுத்து, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விற்பனைக் கூட கண்காணிப்பாளா் பாஸ்கருக்கு உத்தரவிட்டாா். மழைக்காலங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை இங்குள்ள சேமிப்புக் கிடங்கில் இறக்கி ஏலமிடவும் அவா் அறிவுறுத்தினாா். மேலும், வியாபாரிகள் கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com