பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸாா் மிதிவண்டி பேரணி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் மிதிவண்டி பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விழுப்புரம்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் மிதிவண்டி பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமையில் இப்பேரணி நடைபெற்றது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி, பழைய பேருந்து நிலையம், சிக்னல், பெருந்திட்ட வளாகம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிறுவை டி.ராமமூா்த்தி, மாநில செயலாளா் தயானந்தம், மாவட்ட பொருளாளா் ராதாகிருஷ்ணன், நகர தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் நாராயணசாமி, ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் விஸ்வநாதன், காஜா மொய்தீன், ராஜேஷ்,சேகா், புருஷோத்தமன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com