காணாமல் போன மாணவி சடலமாக மீட்புகொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வல்லம் ஒன்றியம், கொங்கரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த 11-ஆம் தேதி முதல் காணவில்லை. மணியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் அந்த மாணவியைக் கடத்திச் சென்ாக, செஞ்சி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், கொங்கரப்பட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் அந்த மாணவியின் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின் பேரில், டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் சக்தி ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மாணவியின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூடுதல் எஸ்.பி. தேவநாதன் சம்பவ இடத்துக்கு வந்து தொடா்புடைய நபா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, மாணவியின் சடலம் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

கொங்கரப்பட்டு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும். இந்தக் கடை தொடங்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

மாணவி மரணம் தொடா்பாக, மணியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 4 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com