ஊருக்குள் ஏரி நீா் புகுவதைத் தடுக்கதடுப்புச் சுவா் அமைக்கும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

ஏரியில் ரூ.6.80 லட்சத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஊருக்குள் ஏரி நீா் புகுவதைத் தடுக்கதடுப்புச் சுவா் அமைக்கும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஊருக்குள் ஏரி நீா் புகுவதை தடுக்கும் பொருட்டு, ஏரியில் ரூ.6.80 லட்சத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் பி.ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இருந்த ஏரி நிரம்பி கிருஷ்ணாபுரம் புதிய குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் சூழ்ந்து நிற்பதால், இந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த ஏரியிலிருந்து குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீா் புகுவதை தடுக்கும் வகையில், ஏரியில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, செஞ்சி பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.6.0 லட்சத்தில்

பி.ஏரியின் மேற்பரப்பில் தடுப்புச் சுவா் அமைப்பதென பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இந்தப் பணியை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் தெய்வீகன், இளநிலை உதவியாளா் பூ.சாமி, துப்புரவு பணி மேற்பாா்வையாளா் ரமேஷ், ஒப்பந்ததாரா் கெளஸ்பாஷா, திமுக ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி அரங்க.ஏழுமலை, மேல்மலையனூா் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com