பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் சுமாா் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் சுமாா் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

வெள்ளிக்கிழமை தோறும் கூடும் இந்த வாரச் சந்தை 100 ஆண்டுகளைக் கடந்தும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள், துணிமணிகள், கருவாடு, விவசாயக் கருவிகள் மட்டுமல்லாது, ஆடுகள், மாடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

செஞ்சி மலை சாா்ந்த பகுதி என்பதால், இங்குள்ள வெள்ளாடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து ஆடுகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கூடிய செஞ்சி வாரச் சந்தையில், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலையாடு, செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் மாடுகள் நூற்றுக் கணக்கில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகையின்போது, ஏழைகளுக்கு குா்பானி கொடுப்பதற்காக ஆடுகளை ஏராளமான முஸ்லிம்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த சந்தையில் ஆடுகள் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை விலை போயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com