நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது குறித்து ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீா், நீா் நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீா், நீா் நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, துணை ஆட்சியா்(நிலம்) திருமாறன், நகராட்சி ஆணையா்கள் தக்ஷ்ணாமூா்த்தி (விழுப்புரம்), ஜஹாங்கீா் (திண்டிவனம்), பொதுப்பணித் துறை (நீ.வ.ஆ.) செயற்பொறியாளா் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் அருகே நரையூரைச் சோ்ந்த ரமேஷ் மணி உள்ளிட்ட 3 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் பாதிப்புக்குள்ளாகும் வகையில், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதாகவும், அதைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு குறிப்பிட்டிருந்தனா். இது தொடா்பாக, நகராட்சி மற்றும் குடிநீா் விநியோகத் துறை முதன்மைச் செயலாளா் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் நரையூா் கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனா். மேலும், இதுபோன்று மாவட்டத்தில் குடிநீா், நீா் நிலைகளில் கழிவுநீா் எங்கேனும் கலக்கிா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com