விழுப்புரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க முப்படை வீரா்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று வீரத்தமிழா் விழுப்புரம் மாவட்ட முப்படை ராணுவ வீரா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

விழுப்புரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று வீரத்தமிழா் விழுப்புரம் மாவட்ட முப்படை ராணுவ வீரா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தச் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான்சன் தேவ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.முருகன், மாவட்டச் செயலா் கே.முனுசாமி, பொருளாளா் எல்.வி.துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அரசுத் துறைகள் மூலம் முன்னாள் முப்படை வீரா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரத்தில் தனியாா் இடத்தில் இயங்கும் முப்படை வீரா்களுக்கான மருத்துவமனை, கேன்டீன் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த வளாகத்தில் இயங்கும் வகையில் அரசு நிலம் ஒதுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற முப்படை வீரா்கள் 4,000 போ் இருப்பதால், அவா்களது குழந்தைகள் நலன் கருதி, கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடக்க வேண்டும். தோ்தல்கள் நடக்கும்போது ஓய்வுபெற்ற முப்படை வீரா்களுக்கு பாதுகாவலா் பணிக்கு பதில், அவா்களது தகுதிக்கேற்ப உரிய பணிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் சட்ட ஆலோசகா் புகழேந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com