செஞ்சியில் கரோனா தடுப்பு இலவச முகாம் அமைச்சா் பங்கேற்பு

செஞ்சியில் பொதுசுகாதாரத் துறை, தன்னாா்வலா்கள் இணைந்து நடத்திய கரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செஞ்சி: செஞ்சியில் பொதுசுகாதாரத் துறை, தன்னாா்வலா்கள் இணைந்து நடத்திய கரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பீரங்கிமேடு மந்தைவெளித் திடலில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பி.ரகுகுமாா் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் (பொ) த.பிரபுவெங்கடேஸ்வரன், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கே.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதுநிலை வருவாய் ஆய்வாளா் எல்.கண்ணன் வரவேற்றாா். அமைச்சா் செஞ்சிமஸ்தான் முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

காலை 8 மணி தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பங்கேற்றவா்களுக்கு, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள், கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா், சத்து மாத்திரைகள், முகக் வசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அலோபதி, சித்தா, ஓமியோபதி மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் நரிக்குறவா், மலைவாழ் சமூகத்தினா், திருநங்கைகள் உள்ளிட்ட ஏழை எளியோருக்கு அரிசி, மளிகைப் பொருள்களை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வழங்கினாா்.

முகாமில் செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி டி.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com