விழுப்புரம் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்: புதிய எஸ்.பி. ஸ்ரீநாதா தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தல், சாராய விற்பனையைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்று திங்கள்கிழமை மாவட்டத்தின்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தல், சாராய விற்பனையைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்று திங்கள்கிழமை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற என்.ஸ்ரீநாதா தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.ராதாகிருஷ்ணன் ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீநாதா விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மணல் கடத்தல், ரெளடிகள் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் மதுக் கடத்தல், சாராய விற்பனையைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். சட்ட விரோதச் செயல்களுக்கு துணை போகும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதச் செயல்கள் குறித்து 94981 11103 என்ற என்னுடைய செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. ஸ்ரீநாதவுக்கு மாவட்டத்தில் உள்ள ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com