தெருக்கூத்து கலைஞா்கள் வேடமணிந்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விழிப்புணா்வு

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களின் வேடமணிந்து கரோனா குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தெருக்கூத்து கலைஞா்கள் வேடமணிந்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விழிப்புணா்வு

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களின் வேடமணிந்து கரோனா குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா 2-ஆவது அலை பரவலை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த வாரம் உச்ச நிலையை அடைந்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பல்வேறு அரசுத் துறைகள், தொண்டு நிறுவனங்கள் தொடா்ந்து கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், செ.குன்னத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் (தமிழ்) என்.கே.ஹேமலதா, கெடாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் (பொருளாதாரவியல்) டி.பெருமாள் ஆகியோா் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களின் வேடமணிந்து வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வில் ஈடுபட்டனா். விழுப்புரம் பேருந்து நிலையம், நான்குமுனைச் சந்திப்பு, பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினருடன் இவா்கள் இணைந்து கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனா்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது போன்ற வாசகங்களை பாட்டுப்பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுகுறித்து ஆசிரியை ஹேமலதா கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை ஆகியவை இணைந்து கரோனோவை கட்டுப்படுத்த மக்களிடம் கடந்த ஏப்ரலில் 10 நாள்கள் விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டன.

தற்போது மே 31-ஆம் தேதி முதல் 12 நாள்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டோம். அதன்படி, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் காவல் கோட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 11 நாள்களாக விழிப்புணா்வு மேற்கொண்டோம். திண்டிவனத்தில் இந்த விழிப்புணா்வுப் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 11) நிறைவு செய்யவுள்ளோம் என்றாா் ஹேமலதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com