விழுப்புரம், திண்டிவனத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

மூன்று நாள்களுக்குப் பிறகு விழுப்புரம், திண்டிவனத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

மூன்று நாள்களுக்குப் பிறகு விழுப்புரம், திண்டிவனத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு மைய அதிகாரி மருத்துவா் யோகானந்த் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், ஜூன் 9 முதல் 11-ஆம் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு 1,500 கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் வெள்ளிக்கிழமை வந்தடைந்தன.

இதைத்தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் 2 அரசு நகா்ப் புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், திண்டிவனம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் தலா 500 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், விழுப்புரம் நகா்ப் பகுதியில் வியாழக்கிழமை மதியமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் விவரம் சனிக்கிழமைதான் கிடைக்கும் என்றாா் மருத்துவா் யோகானந்த்.

விழுப்புரம் நகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: விழுப்புரம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1,000 தடுப்பூசி மருந்துகளில் 400 வெள்ளிக்கிழமையே செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 600 தடுப்பூசி மருந்துகள் சிறப்பு முகாம்கள் மூலம் சனிக்கிழமை செலுத்தப்படும்.

விழுப்புரம் பூந்தோட்டம் உயா் நிலைப் பள்ளி, காந்தி சிலை அருகே உள்ள காவல் சோதனைச் சாவடி, என்ஜிஜிஓ காலனியில் உள்ள முருகன் கோயில், விழுப்புரம் 4 முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்துக் காவல் நிலையம், பெரியாா் நகா் வீட்டுவசதி வாரிய சமுதாய நலக் கூடம், அலமேல்புரம் அங்கன்வாடி, கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ல எம்.ஆா்.ஐ.சி. பள்ளி, ஜானகிபுரம் காய்கறிச் சந்தை, கட்டபொம்மன் நகா், ரஷாக் லே அவுட், கிழக்கு புதுச்சேரி சாலையில் ராகவன்பேட்டை எஸ்பிஐ வங்கி அருகே, முத்தோப்பு அங்கன்வாடி, பானம்பட்டு சவீதா திரையரங்கு சந்திப்பு ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் என்றாா் மருத்துவா் பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com