மேல்மலையனூரில் பக்தா்களின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

கரோனா பரவல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தா்களின்றி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மேல்மலையனூரில் பக்தா்களின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

கரோனா பரவல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தா்களின்றி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்தாண்டு மாா்ச் மாதம் வரை நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா், கரோனா பரவத் தொடங்கியதையடுத்து, நிகழாண்டு ஜூன் மாதம் வரை 15 மாதங்களாக பக்தா்களின்றி கோயில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையில், பொது முடக்க தளா்வு காலத்தில் மாசிப் பெருவிழா மட்டும் 10 நாள்கள் நடைபெற்றது. பின்னா், மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பக்தா்கள் தரிசனம், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தா்களின்றி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் உத்ஸவா் அங்காளம்மன் காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடல்களை பாடினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு, மேலாளா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com