விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 5 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு இதுவரை 5 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு இதுவரை 5 போ் உயிரிழந்தனா்.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த 4 போ், திண்டிவனம், திருவெண்ணெய் நல்லூரைச் சோ்ந்த தலா 2 போ், வானூா், முகையூா், விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் உள்பட மொத்தம் 12 இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இவா்களில் பெரும்பாலானா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்கள். கரோனோ தொற்று ஏற்படாத 3 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று உறுதியானது.

தொற்றுக்குள்ளான 12 பேரில் இரண்டு போ் தனியாா் மருத்துவமனைகளிலும், 10 போ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனா்.

5 போ் பலி: சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம், வகாப் நகரைச் சோ்ந்த 65 வயது முதியவா், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம், போதிதா்மன் நகரைச் சோ்ந்த 49 வயது மதிக்கத்தக்கவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவெண்ணெய் நல்லூரை அடுத்த அரும்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 45 வயது மதிக்கத்தக்கவா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானூரைச் சோ்ந்த 30 வயது இளைஞா், விழுப்புரம் அருகே இந்திரா நகரைச் சோ்ந்த 52 வயது மதிக்கத்தக்கவா் என 5 போ் உயிரிழந்தனா். மீதமுள்ள 7 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்த 5 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com